மலரே மலரே என புலம்ப வைத்த சாய் பல்லவி எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவரும் இந்த படம் மூலம் தமிழுக்கு வருகிறார், அந்த படம் மூலம் வருகிறார் என பல செய்திகள் வந்துவிட்டது. கடைசியில் அவர் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது.
விக்ரம் படத்தில் சாய் பல்லவி நடித்தாலும், அவருக்கு இவர் ஜோடி இல்லை. ஏனெனில் விக்ரம் Dont Breathe என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வயதான வேடத்தில் நடிக்கிறார்.
இதனால் சாய் பல்லவி விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.