இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி புகழ்பெற்றவர் கலா.
இதுவரை 4000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள அவர் தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இவரிடம் நடனம் பயிலாத முன்னணி தமிழ் நடிகர்களே இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ” அஜித் ஒரு சிறந்த மனிதர்.
அவர் தினமும் என் வீட்டுக்கு வந்து என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து நடனம் கற்றார்.
அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என கூறியுள்ளார்