2015 இல் நடந்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதில் விஷால், கார்த்தி, பொன்வண்ணன் மற்றும் பலர் தேர்வானார்கள்.
சில பல விவாதங்களுக்கு பிறகு சமீபத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலிலிருந்து முன்பு பதவியிலிருந்த சரத்குமார், ராதா ரவி ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் 27ம் தேதி சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்களும் கலந்து கொள்ள நடிகர் சங்கத்துக்கு உத்தரவு போடவேண்டும் என சரத்குமார், ராதா ரவி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி வரும் வெள்ளிக்கிழமை விசாரணையை தள்ளிவைத்து தீர்ப்பளித்தார்.