Saturday, 12 November 2016

சிம்புவிற்கு ரசிகர்கள் போட்ட மார்க்!



கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நேற்று வெளியானது. சிம்பு ரசிகர்களை பொறுத்தவரை தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் போல. பாடல், டீஸர் ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்ட இப்படம் எப்போது வரும் என தீவிர எதிர்பார்ப்பு சூழ்ந்தது.

அப்போ வரும், இப்போ வரும் என சொல்லி கடைசியில் படம் உறுதியாகி வெளியாகும் நேரத்தில் ரூபாய் நோட்டு பிரச்சனை.

இருந்தாலும் போட்டிக்கு வந்த படங்கள் பின் தள்ளிப்போக, தற்போது இருக்கும் பண நெருக்கடி சூழ்நிலையில் படம் வெளிவந்து நல்ல வசூலை குவித்தது பலருக்கும் ஆச்சர்யமே.

நேற்றிலிருந்து ரசிகர்கள் எனக்கு இந்த காட்சிகள் பிடித்திருக்கிறது, அந்த பாடல்கள் பிடித்திருக்கிறது என மாறி மாறி போட்டோவை வெளியிட்டும், கருத்துக்கள் சொல்லியும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தனர்.

ஊடகங்கள் முழுக்க பலரும் 3 முதல் 4 வரை மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்கள். சிம்பு, கெளதம் மேனன் மஞ்சிமா என பலருக்கும் டேக் பண்ணி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.


Next

Related