ஜெயலலிதாவுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்தார் நடிகர் ராமராஜன், அதிமுக-வின் பெருமைகளை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கச் செய்தவர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் மனமுடைந்து போனார்.
இதனால் மாரடைப்பும் ஏற்படவே, விவாகரத்தான மனைவி நளினி தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
அம்மாவே போன பின்னர் வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ராமராஜன் தற்போது கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும், பைபிளில் முழுமையாக படித்து முடித்து விட்டதாகவும் தெரிகிறது.
போதகராக மாறிவிட்ட ராமராஜன், ஜனவரி 1ம் திகதி மதுரையில் நடக்கும் விழாவில் மக்களுக்கு அறிவுரை வழங்க போவதாகவும் தகவல்கள் பரவுகிறது.
அம்மா அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறியவர் தற்போது அல்லேலூயா என பாடப் போகிறாராம்.