Sunday 18 December 2016

யாகூ கணக்குகள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்



முன்னணி தேடல் பொறிகளுள் ஒன்றாகவும், சிறந்த மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் யாகூ திகழ்கின்றது.

இந் நிறுவனத்தின் பயனர் கணக்குகள் மீது அண்மைக்காலமாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந் நிலைியல் மீண்டும் ஒரு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட மின்னஞல்களை தனது 500 மில்லியன் பயனர்களின் கணக்குகளில் இருந்து வேறுபடுத்தியுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்றினையும் அனுப்பியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட குறித்த கணக்குளில் இருந்து பிறந்த திகதி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் சில கடவுச் சொற்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இத் தாக்குதில் பாதிக்கப்பட்டவர்களுள் தவறவிடப்பட்டவர்களினது விபரங்களையும் யாகூ நிறுவனம் கோரியுள்ளது.


Next

Related