தனக்கு பெருமளவில் மிஸ்டுகால் மூலம் ஆதரவு அளித்துள்ள பொது மக்களுக்கு முதல்வர் ஓ.பி.எஸ் வாய்ஸ்காலில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற போவது ஓ.பன்னீர்செல்வமா அல்லது சசிகலாவா என்ற போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.
ஓ.பி.எஸ்க்கு கட்சி நிர்வாகிகளிடையே அதரவு பெருகி வரும் வேளையில், பொது மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.
ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் 9289222028 என்ற செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என அ.தி.மு.க.வின் தொழில் நுட்பப் பிரிவில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து முதல் 48 மணி நேரத்துக்குள் 33 லட்சம் பேர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக மிஸ்டுகால் கொடுத்துள்ளனர்.
வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாட்டு மக்களும் அவருக்கு அதரவளித்து மிஸ்டு கால் கொடுக்கிறார்கள் என்பது முக்கிய விடயமாகும்.
மக்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ள ஓ.பி.எஸ், மிஸ்டுகால் மூலம் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. அம்மா வழியில் மக்கள் பணி தொடரும் என ஆதரவு தெரிவித்துள்ள மக்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.