Saturday, 18 March 2017

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 கெட்டப் - சிம்பு வெளியிட்ட தகவல்



சிம்பு அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்பு வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார்.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஸ்வின் தாத்தா உட்பட 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதிக எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் அஸ்வின் தாத்தா டீசர் இன்று வெளியானது. நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து இன்று பேஸ்புக் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் எல்லோரும் எதிர்பார்ப்பது போல் 3 கெட்டப் மட்டுமல்ல நான்காவதாக இன்னொரு கதாபாத்திரமும் உள்ளதாம். இது ரொம்ப சஸ்பென்ஸான கதாபாத்திரம். படம் வெளியாகும்போது மட்டும்தான் ரசிகர்கள் பார்க்க முடியுமாம். ரசிகர்களுக்காக இது பற்றி கூறியுள்ளார். இயக்குனர் இதற்காக கண்டிப்பாக கோபித்துக்கொள்வார் எனவும் கூறினார்.


Next

Related