Friday, 24 March 2017

நடிகர் கருணாஸ் அதிரடி அறிவிப்பு: கட்சி நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தார்



நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கருணாஸ் சசிகலா தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதிற்கு தொகுதி மக்களுக்கும் புலிப்படை நிர்வாகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர் தொகுதிக்கு சென்ற போது சில பிரச்னைகளையும் சந்தித்தார். இந்நிலையில், கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைப்பதாக அறிவித்துள்ளார்.

அனைவரும் தற்காலிகமாக செயல்பட்டவர்கள், புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.


Next

Related