சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ரெமோ ரூ 90 கோடி வரை வசூல் செய்து சாதனைப்படைத்தது.
இந்நிலையில் இவரின் அடுத்தப்படமான வேலைக்காரன் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதாக பூஜை போட்ட அன்றே வெளிவந்தது.
ஆனால், அதே மாதத்தில் தான் அஜித் நடித்த விவேகம் படமும் ரிலிஸாகவுள்ளது, இதன் மூலம் கண்டிப்பாக வசூல் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதனால், வேலைக்காரன் படத்தை ஒரு சில வாரங்கள் தள்ளி ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.