Friday, 10 March 2017

சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா? விஜய் சேதுபதி அதையெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை



சிவகார்த்திகேயன் படம் என்றாலே ஹிட் என்ற நிலைமை வந்துவிட்டது. அதனால், அவரும் ஒவ்வொரு படமாக பார்த்து, பார்த்து நடித்து வருகின்றார்.

ஆனால், தொடர்ந்து இவர் ஏதாவது ஒரு மேடையில் அழுதுக்கொண்டே இருக்கின்றார், இது ஒரு குற்றச்சாட்டாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில் இயக்குனர் கரு.பழனியப்பன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ‘சிவகார்த்திகேயன் படத்தில் கதை கொஞ்சம் இருந்தாலும், வெற்றிக்கு அவர் அழுகை தேவைப்படுகின்றது.

அதனால், அந்த ட்ராமா தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, ஆனால், விஜய் சேதுபதி அதையெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை, அதனாலேயே அவர் எந்த வேடத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்’ என கூறியுள்ளார்.


Next

Related