ராமேஷ்வரம் மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், பிரிட்சோ என்னும் 21 வயதே ஆன மீனவ இளைஞர் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த செய்தி தமிழர் இதயங்களை இடிப்போலத் தாக்கி இருக்கிறது
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, வலைகளை அறுத்தெறிவது எனச் இலங்கை ராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல.
தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படையைத் தடுக்க வக்கற்றுப் போனத் இந்தியக் கடற்படையை நம்பி நமது மீனவர்களை இனி கடலுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
மேலும், தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இலங்கை மீது போர்தொடுத்து கச்சத்தீவினை மீட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.