பரத நாட்டியத்தில் போதிய பயிற்சி இல்லாத ரஜினியின் மகளுக்கு, ஐ.நா சபையில் ஆட வாய்ப்பு கிடைத்தது எப்படி என? முன்னணி பரதக் கலைஞர்கள் விமர்சித்துள்ளனர்.
சமீபத்தில் ஐ.நா மன்றத்தின் தலைமையகத்தில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பரத நாட்டியம் ஆடினார்.
இதன் மூலம் ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் சார்பாக நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள், சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.