போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு வீடு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவிருந்த ரஜினிகாந்த் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் பலரும் இலங்கை பயணத்தை எதிர்த்த அரசியல் தலைவர்களை திட்டிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் லொள்ளுசபா மூலம் பிரபலமான நடிகரும், தீவிர ரஜினி ரசிகருமான ஜீவா கோபமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களிடம் பணமாக, நன்கொடையாக வாங்கியே பழக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு போரில் பாதிக்கபட்ட மக்களுக்கு வேறு யாராவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது. காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது. ஈழம் பேசும் அரசியல்வாதிகளில் சிலர் அந்த மக்களை சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதை பலமுறை நான் சந்தித்தபோது இலங்கை தமிழ் மக்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். தைரியம் இருந்தால் அந்த மக்களின் பணத்தை நாங்கள் வாங்கியதில்லை என்று இதுபோன்ற கட்சிகள் சொல்லட்டுமே பார்க்கலாம்" என்று கோபமாக கூறியுள்ளார்.