அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் திடீர் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைக்கு காரணகர்த்தா பன்னீர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே நகரில் கடந்த சில தினங்களாக நடந்தேறும் களேபரங்கள் தேர்தலை ரத்து செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் முதலில் பன்னீர் அணியை ஆதரிப்பதாகவே முடிவெடுத்திருந்தாராம். ஆனால் மாபா பாண்டியராஜனுக்கும் சரத்குமாருக்கும் இருந்த மனக்கசப்பை தெரிந்துகொண்ட தினகரன் தரப்பு ஒரு பெரிய தொகையை சர்த்குமாறுக்கு வழங்கி தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது.
சரத்குமார் வழியாக ஆர்.கே.னகரில் உள்ள நாடார் சமூக வாக்குகளை அள்ளுவதே தினகரனின் திட்டம்.
இதற்கு முக்கிய நபராக அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டுள்ளார். விஜயபாஸ்கர் மூலமாகவே அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் நடந்துள்ளது.
இந்த தகவல் மாபா பாண்டியராஜன் காதுக்கு எட்டியதும், அவர் பன்னீரிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து பன்னீர் செல்வம் அவரது மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் மூலம் டெல்லியில் நிதியமைச்சகத்தில் உள்ள முக்கியமான நபரிடம் பேசியிருக்கிறார்கள்.
அதன் பிறகே இந்த ரெய்டு நடந்திருக்கிறது. இதில், சரத்குமார் வீட்டிலிருந்து, தினகரன் தரப்பு அளித்த தொகையிலிருந்து பத்து சதவிகிதம் தவிர மீதி அனைத்தும் கைப்பற்றியுள்ளனர்.
மட்டுமின்றி பணப்பரிமாற்றம் நடந்த பல்வேறு முக்கியமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணங்களை வைத்து விரைவில் விஜயபாஸ்கர் உள்பட சில அதிகாரிகள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பாய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.