உலகின் முன்னணி வீடியோ பகிரும் இணையத்தளமாக விளங்குவது யூடியூப் ஆகும்.
இத்தளமானது கூகுளுடன் இணைந்து விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கி வருகின்றது.
அதாவது யூடியூப் கணக்கு வைத்திருப்பவர்கள் தாம் பதிவேற்றும் வீடியோவின் ஊடாக வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும்.
இதுவரை காலமும் இந்த விளம்பர சேவையினை பெற்றுக்கொள்வதற்கு பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் எதிர்காலத்தில் யூடியூப் கணக்கினை ஆரம்பித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட முயல்பவர்களுக்கு நிபந்தனை ஒன்றினை விதித்துள்ளது யூடியூப்.
இதன்படி விளம்பர சேவையை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது ஏதாவது ஒரு வீடியோவினை குறைந்த பட்சம் 10,000 தடவைகள் பார்வையிடப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் இந்த விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.