நடிகை ரம்பா தனது கணவருடன் திருமலாவிற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை ரம்பா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தின் துணையோடு மீண்டும் தனது கணவருடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துவிட்டதால் சந்தோஷம் கொண்டுள்ள அவர், திருமலாவிற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று காலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.