உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் படிப்பு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் போன்ற விடயங்களுக்காக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்கிறார்கள்.
எந்த நாடுகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்?
மெக்சிகோ
மெக்சிகோவிலிருந்து சராசரியாக தற்போது வரை 11,900,000 மக்கள் வேறுநாடுகளில் வசித்து வசித்து வருகிறார்கள். அதில் 98 சதவீத மக்கள் அமெரிக்காவில் வசித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகர்கள் உக்ரைன் மற்றும் சவுதி அரேபியாவுக்கும் புலம் பெயர்கிறார்கள்.
இந்தியா
இந்தியாவிலிருந்து இதுவரை 11,400,000 மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த 19ஆம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் பிரித்தானியாவுக்கு புலம் பெயர தொடங்கினார்கள்.
ரஷ்யா
ரஷ்யாவிலிருந்து இதுவரை தோராயமாக 11,100,000 மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளார்கள். சிறந்த வாழ்க்கை மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகிய காரணங்களுக்காகவே ரஷ்ய மக்கள் வேறு நாடுகளை நாடுகிறார்கள்.
கடந்த 2013ல் மட்டும் 186,382 என்ற அதிகளவில் ரஷ்ய மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.
சீனா
கடந்த 19ஆம் நூற்றாண்டில் அரசியல் ஊழல், போர்கள், உணவு பஞ்சம் போன்ற காரணங்களால் அதிகளவிலான சீன மக்கள் தாய் நாட்டிலிருந்து வெளியேறினார்கள்.
தற்போது அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக சீன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுவரை 8,300,000 மக்கள் சீனாவிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
உக்ரைன்
அமைதி வேண்டியும், பொருளாதார பிரச்சனை மற்றும் போர் பிரச்சனையிலிருந்து மீளவும் உக்ரைன் மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்கிறார்கள்.
உலகில் பல்வேறு நாடுகளுக்கு 6,600,000 உக்ரைன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.