Friday, 19 May 2017

இவரை தெரியுமா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்



தமிழ்நாட்டில் சமையல் செய்வதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் அசைவ உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர்.

இதைவைத்து இவர்கள் குடும்பம் கடந்த ஆறு மாதங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு ,வாத்து கறி போன்ற நாக்கில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை ஆறுமுகம் சமைக்க அதை கோபிநாத் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.

அவர் குடும்பம் இதற்கு உதவியாக இருக்கிறது. Village Food Factory என்னும் தனி யூடியூப் சேனல் கோபிநாத்துக்கு உள்ளது.

கூகுள் ஆட்சென்ஸ், பங்குதாரர் வலைத்தளங்கள் மற்றும் சேனல்களின் விளம்பரங்களை மூலம் கடந்த ஆறு மாதங்களில் இந்த குடும்பம் 6.5 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.

இது குறித்து கோபிநாத் கூறுகையில், இதுவரை 42 சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். என் தந்தை தற்போது யூ-டியூப் பிரபலமாக வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இதுவரை எங்கள் வீடியோவை 30 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். முதல் மாதம் எங்களுக்கு 8000 வருமானம் தான் வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் வர ஆரம்பித்தது என பெருமையுடன் கூறுகிறார்.

1000 வீடியோவை பதிவேற்றுவதும், பிற்காலத்தில் ஹொட்டல் தொடங்குவதும் இந்த குடும்பத்தின் திட்டமாக உள்ளது.


Next

Related