Tuesday, 16 May 2017

இளையதளபதி விஜய்யையும் தாண்டி அட்லீ இயக்க விரும்பும் அந்த ஒரு நடிகர் யார் தெரியுமா?



அட்லீ தற்போது விஜய்யை வைத்து அவருடைய 61வது படத்தை இயக்கி வருகிறார். படக்குழுவும் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பாடலும் படமாக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருக்கும் நிபுணன் டீஸர் 150 பிரபலங்கள் வெளியிட நேற்று 1.50 மணியளவில் வெளியாகி இருந்தது.

ஏனெனில் அர்ஜுனின் 150வது படம் இது. இப்படத்தின் டீஸரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அட்லீ, அதில் அர்ஜுன் சார் உங்களை இயக்க வேண்டும் என்பது எனது கனவு என குறிப்பிட்டுள்ளார்.


Next

Related