இளைய தளபதி விஜய்யின் 61-வது படத்தின் டைட்டில் இன்று வருவதாக கூறினார்கள். பலரும் ஆவலுடன் காத்திருக்க டைட்டில் மெர்சல் என வந்தது. இதில் விஜய் நாம் முன்பே கூறியது போல் முறுக்கு மீசையுடன் உள்ளார், மேலும், பின்பு காளை மாடுகள் வருவது போல் காட்சிகள் இருக்கின்றது.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக ஒரு சில காட்சிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி மெர்சல் டைட்டிலில் ‘ல்’ எழுத்தை கவனித்தால் மாட்டு வால் போல் வடிவமைத்துள்ளனர்.
கண்டிப்பாக இப்படம் ஜல்லிக்கட்டு குறித்து ஆழமாக பேசும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.