Tuesday, 20 June 2017

பிரபல இளம் நடிகை தூக்குமாட்டி தற்கொலை


மும்பையில் நடிகை ஒருவர் தான் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை ஜூஹூ பகுதி, பரிமல் சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா.

அவரது குடும்பத்தில் அலஹாபாத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் இருக்கும் அஞ்சலியை தொடர்பு கொள்ள அவர்களது பெற்றோர்கள் ஞாயிற்றுக்கிழமை போன் செய்துள்ளனர்.

வெகு நேரம் ஆகியும் தொடர்பு கொள்ள இயலாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர் திங்கட்கிழமை காலை அஞ்சலி தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்துள்ளனர். அப்போது அஞ்சலியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனக்கூறி நேரில் சென்று பார்த்து வரக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன்படி அஞ்சலி தங்கியிருந்த குடியிருப்புக்க்கு சென்று மற்றொரு சாவியால் வீட்டை திறந்து பார்த்திருக்கிறார் அஞ்சலி குடியிருந்த வீட்டின் உரிமையாளர். அஞ்சலி வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சலி ஸ்ரீவஸ்தவா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next

Related