Friday, 24 November 2017

பாலியல் வழக்கில் சிக்கிய 4 வயது சிறுவன்... அதிர்ச்சியில் பொலிசார்



புதுடில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் 4 வயது சிறுவன் சக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படிக்கும் 4 வயது மாணவி சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாள். பெற்றோர் விசாரித்த போது சக மாணவன் சிறிமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிறுமியை சேர்த்த போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதை உறுதி செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பொலிசில் புகார் செய்ததையடுத்து அந்த 4 வயது சிறுவனுக்கு எதிராக டில்லி பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் பொலிசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Next

Related