நடிகர் ஆர்யா தான் திருமணம் செய்துகொள்ள பெண் வேண்டும் என்று ஒரு வீடியோ வெளியிட்டார். முதலில் ஜிம்மில் அவர் விளையாட்டாக பேசிய வீடியோவை அவரகளது நண்பர்கள் வெளியிட்டுவிட்டனர் என்று கூறிய ஆர்யா.
பின் அவர் உண்மையில் பெண் வேண்டும் என்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டதோடு மொபைல் நமபர் ஒன்றும் கொடுத்து என் மேல் விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு கால் செய்யுங்கள் என்றார்.
இந்த வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வந்தது.
பாலிவுட்டில் சுயம்வர் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன் முதல் சீசனில் நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டார்.
முதல் சீசனில் கலந்து கொண்டவர்களில் எலீஷ் பருஜன்வாலா வெற்றி பெற்றிருந்தார். அவரையே ராக்கி சாவந்த் திருமணமும் செய்தார், ஆனால் இடையில் சில பிரச்சனையால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது ஆர்யாவும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் நடக்க இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆர்யா கலந்து கொள்ள போகிறார் என்றும் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அவர் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த வீடியோக்கள் விஷயம் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஏதாவது நிகழ்ச்சிக்கான புரொமோஷன் விஷயமாக கூட இருக்கலாம் என்கின்றனர்.