Thursday, 9 November 2017

" நண்பன் " படத்தில் நடித்த பிரபல்யத்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..!



நடிகைகளுக்கு என்ன அவர்கள் நிறைய படங்கள் நடிக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள் என நாம் நினைப்போம். ஆனால் அவர்களும் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

அண்மையில் 21st World Congress of Mental Health என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பன் பட நாயகியான பிரபல நடிகை இலியானா தன்னுடைய கடந்த கால கஷ்டங்களை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், என் உடலுக்கு ஏற்றவாறு நான் எல்லா விஷயங்களை தேர்வு செய்வேன். நான் எப்போதும் எதுவும் செய்ய முடியாத, சோகமான பெண்ணாக இருந்தேன்.

ஆனால் அப்போது எனக்கு தெரியாது நான் மன அழுத்தத்தாலும், உடல் டிஸ்மார்பிக் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று, ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள கூட முடிவு செய்தேன்.

மன அழுத்தத்தில் இருந்தால் முதலில் நம்மை நாம் புரிந்துகொண்டு அதனை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next

Related