Monday, 6 November 2017

அழகிய மனைவியை கொலை செய்த கால்பந்து வீரர் - வெளியான அதிர்ச்சி காரணம்



கனடாவின் கால்கரி ஸ்டாம்பெடர்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் அந்தோனி மெக்லாநகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் கால்கரி ஸ்டாம்பெடர்ஸ் அணிக்காக விளையாடிய Anthony D. McClanahan-ன் மனைவி Keri கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் உட்டா பகுதியில் உள்ள Park City பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அவரின் கழுத்துப் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இவரை Anthony D. McClanahan தான் கொலை செய்துவிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதனால் இவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மகனை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மகன் அங்குள்ள Arizona பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவரை Anthony D. McClanahan கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் திகதி கடத்தி அதன் பின் அக்டோபர் 12-ஆம் திகதி தான் விடுவித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


Next

Related