Wednesday, 22 November 2017

ஜோதிகா குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - கடும் கோபத்தில் மாமனார் ?



திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார் நடிகை ஜோதிகா. தற்போது அவர் பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் ஜோதிகா போடா தேவிடியா பையா என கூறுவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குடும்ப பாங்காக நடிக்கும் ஒரு நடிகையின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா என கேட்கின்றனர்.

அதே நேரம் ஒரு முன்னணி ஹீரோ இந்த வசனத்தை பேசி இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். இப்போது நடிகை பேசினால் தப்பா என ஆதரவு குரலும் எழுந்துள்ளது.

குடும்பத்தினர் என்ன சொல்லி இருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் எழுந்துள்ளது. கணவர் சூர்யாதான் டீசரை வெளியிட்டு இருப்பதால் அவரை எதுவும் சொல்ல வாய்ப்பில்லை. ஆனால் மாமனார் சிவக்குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஜோதிகா மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next

Related