Friday, 1 December 2017

ஒருதலைக்காதல்! தாய், மகளுக்கு ஏற்பட்ட விபரீதம்!!



காதலிக்க மறுத்த பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துன்பியல் சம்பவம் சென்னை ஆதம்பாக்கத்தில் இடம்பெற்றது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

சரஸ்வதி நகரைச் சேர்ந்த ரேணுகா என்பவரின் மகளான இந்துஜாவை ஒருதலையாகக் ஆகாஷ் என்பவர் காதலித்து வந்தார்.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் தான் காதலித்த பெண் என்று கூட பாராமல் இந்துஜா மீது பெற்றோலை ஊற்றிவிட்டு குறித்த இளைஞன் தப்பியோடிய சம்பவம் அனைவரிடத்திலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த பெண் (இந்துஜா) அதே இடத்தில் உயிரிழந்தார்.

அவரைக் காப்பாற்றச் சென்ற தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண்ணின் தாயார் உயிரிழந்துள்ளார்.


Next

Related