தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காய்ச்சல் மற்றும் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது நலமுடன் இருப்பதாகவும், எப்போதும் போன்றே உணவுகளை உட்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுநீரகம் மற்றும் சர்க்கரை வியாதிக்காக சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவவே, அதிமுக தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.