சமூகத்தில் மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளால் குழந்தை பெற்றெடுக்க முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது.
குரோமோசோம் நிலைபாட்டின் காரணமாக தான் திருநங்கைகளாக ஆகின்றனர். இது சிலருக்கு பிறப்பால் வேறுப்பட்டிருக்கும். சிலருக்கு வளர, வளர அந்த மாற்றம் அல்லது தாக்கம் அதிகரித்திருக்கும்.
டிரான்ஸ் பெண்கள் - Trans Women
டிரான்ஸ் பெண்கள் என்பவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள். பிறப்பால் ஆணாக இருப்பினும், இவர்களிடம் பெண்மைக்கான குறியீடுகள் தென்படும்.
இவர்களுக்கு xy குரோமோசோம் இருக்கும். ஆனால், கருப்பை இருக்காது. இதில் இவர்கள் கருத்தரிக்க வேண்டுமெனில் கருப்பை மாற்றம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது, அவர்களது வயிறு பகுதியில் Egg Implant செய்ய வேண்டும், அதற்கான ஹார்மோன் தெரபி வழங்க வேண்டும்.
ஆனால், இவர்கள் கருத்தரிக்க முயல்வது அவர்களது உயிருக்கே கூட அபாயமாக மாறலாம் கரு வளர்ச்சி சரியாக இல்லாமல் போனால் சுற்றி இருக்கும் உடல் உறுப்புகளுக்கு அது அபாயமாக மாறும்.
டிரான்ஸ் ஆண்கள் - Trans Men
டிரான்ஸ் ஆண்கள் என்பவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்கள். பிறப்பால் பெண்ணாக இருப்பினும், இவர்களிடம் ஆண்களுக்கான குறியீடுகள் தென்படும். இவர்களுக்கு xx குரோமோசோம் இருக்கும்.
இவர்களுக்கு கருப்பை, கருப்பை வாய் இருக்கும்.
ட்ரான்ஸ் ஆண்களிடம் xx குரோமோசோம் மற்றும் கருப்பை, கருப்பை வாய் இருப்பதாலும் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.
இவர்களுக்கு, தான் எந்த வித அபாயமும் இல்லாமல், கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.