பீகாரில் மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பெண் வேடமிட்டு 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையை ஏமாற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் மோசடி தொழில் செய்து வருபவர் அவினாஷ். இவர் மது கடத்தல் மற்றும் போலி அரசாங்க ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் வரை அனைத்து சமூகவிரோத செயல்களையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பொலிசாரின் பிடியில் சிக்காமல் மர்மமான முறையிலேயே இவரது நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அவினாஷ் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது மோனிக்கா என்ற பெண் என்பதும் அவினாஷ் அல்ல எனவும் பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்தன.
இதனிடையே குறிப்பிட்ட நபரின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு 5 போத்தல் மது, மடிக் கணணி, அரசாங்க முத்திரைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.
மட்டுமின்றி மோனிகா என்ற பெயரில் பெண்கள் உடை அணிந்து அவினாஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பாலியல் வீடியோக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
மோனிக்கா என்ற புனைப்பெயரில் சமூக விரோத தொழில் செய்துவரும் அவினாஷை கைது செய்த பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து தமக்கு இந்த யுத்தி பிடிபட்டதாகவும், அதன் பின்னரே தாம் பெண் வேடமிட்டு வந்துள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான அவினாஷ் திரும்பி வந்ததும் தனது வேஷத்தை மாற்றிக்கொண்டு இதுபோன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.