சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலக அளவில் பிரபலமானவர். பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ள இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு திருவிழா தான்.
அப்படி ஒரு ட்ரெண்டாகிவிட்டது. வசூல் வேட்டையை குவிக்கும் இவரின் படங்கள் வந்தால் மற்றவர்கள் தங்கள் படங்களை தள்ளிவைக்க வேண்டிய நிலைமை தான்.
அப்படி பார்க்கும்போது தீபாவளிக்கு இவரின் படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ரசிகர்களும் அதையே ஆவலாக எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் சில காலமாக இது நடைபெறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் வருடக்கணக்கு ஆகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் மாறவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது என்றே சொல்லாமல்.
அந்த வகையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அக்டோபர் 3 1995 ல் வெளிவந்த முத்து படம் நல்ல வசூலை குவித்தது.
அதன் பிறகு அவருக்கு பல படங்கள் ரிலீஸ் ஆனாலும் தீபாவளிக்கு ஏதும் ரிலீசே ஆகவில்லை. தற்போது சங்கர் இயக்கத்தில் 2.0 படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது.
21 வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் வாழ்வில் இது மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.