தமிழ் சினிமாவில் எப்படியாவது விஜய், அஜித்துடன் பணியாற்ற வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். இவை ஆரம்பத்திலேயே செய்துக்காட்டிய அதிர்ஷ்டசாலி இயக்குனர் பேரரசு.
இவரின் முதல் படமே இளைய தளபதியின் திருப்பாச்சி தான், ஆனால், பேரரசுவிற்கு அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் விருப்பமாம்.
அதனால், திருப்பாச்சி கதையை அஜித்திற்காக தான் ரெடி செய்தாராம், பிரபல கம்பெனி விஜய் கால்ஷிட்டை வைத்திருக்க, அதற்காக தான் விஜய்யை வைத்து திருப்பாச்சி எடுத்தாராம். பிறகு எப்படியோ திருப்பதியில் அந்த வாய்ப்பு அமைந்துவிட்டது.
இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் பேரரசு கூறியுள்ளார்.