Saturday, 12 November 2016

நீங்கள் இறந்த பின் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் என்ன ஆகும்?



தற்போது உள்ள காலக்கட்டத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது.

இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் தான். குறிப்பாக பிரபலமாக உள்ள பேஸ்புக்கில் தான் பலரும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

நட்பு, குடும்பம் என பல முக்கியமானவர்களின் தொடர்பும் இதன் வழியே மட்டுமே அதிகமாக அமைகிறது.

இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் அப்படியே இருக்க தான் செய்யும்.

ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப நபர்கள் பயன்படுத்தும் வகையில் சில ஆப்ஸன்களை பேஸ்புக் வழங்கி இருக்கிறது.

இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதாரம் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

அதே போல் இறப்பிற்கு பின்னர் உங்களது பேஸ்புக் அக்கவுண்டை மொத்தமாக அழிக்கவும் ஆப்ஸன் வழங்கப்பட்டுள்ளது.

Settings> Security > Legacy Contact> Request account deletion> Delete After Death சென்று இதனை மேற்கொள்ள முடியும்


Next

Related