Wednesday, 23 November 2016

அரிசி உருண்டை சாப்பிட்ட ஜப்பான் இளைஞருக்கு நேர்ந்த கதி! வேகமாக உண்ணும் போட்டி



ஜப்பானில் நடைபெற்ற வேகமாக உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு அரிசி உருண்டைகளை சாப்பிட்ட ஜப்பான் இளைஞர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வேகமாக உண்ணும் போட்டி ஜப்பானின் ஷிகா பகுதியில் உள்ள ஹிகோன் என்ற இடத்தில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த நவம்பர் 13-ஆம் திகதியன்று இப்போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பானை சுற்றியுள்ள பகுதியிலுள்ள பலர் கலந்துகொண்டனர்.

மூன்று நிமிடங்களில் ஐந்து ஓனிகிரி எனப்படும் அரிசி உருண்டைகளை உண்ண முயற்சித்து 28 வயதுடைய ஜப்பானிய இளைஞர் ஒருவர் இறந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கிறது. உற்சாகத்தில் தொடங்கிய இந்த போட்டி, இளைஞரின் இறப்பினால் பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இறுதியாக, இப்போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டாகேறு கோபயாஷி முதலிடம் பிடித்தார். இவர் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஹாட் டாக்’ உணவு போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர் என்பது குறிப்பிடதக்கது.


Next

Related