ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எல்டிஇ சேவைகள் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் வரும் வாரங்களில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க இருக்கிறதாம்.
இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நீட்டிப்புக் குறித்துத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்படலாம். டிசம்பர் 28 ஆம் தேதி திருபானி அம்பானியின் பிறந்த நாள் என்பதால் இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.