Tuesday, 15 November 2016

பணம் எடுக்க நிர்வாணமாக வரிசையில் நின்ற இளம்பெண்! அதிர்ச்சியடைந்த பொலிசார்



இந்தியா தலைநகர் டெல்லியில் பணம் எடுக்க ஏடிஎம் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த பெண் திடீரென மேலாடையை கழற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chandni Chowk, Mayur Vihar Phase 3 பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகினறனர்.

இந்நிலையில், பணத்தை எடுக்க Mayur Vihar Phase 3 பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திலே நின்றுக்கொண்டிருந்த பெண், திடீரென மேலாடையை கழற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே பொலிசாருக்கு தகவல் அளிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பெண் பொலிசார் பெண்ணிற்கு உடை அணிவித்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர், அவர் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, வரிசையில் நிற்காமல் உடனே பணத்தை எடுத்துச் செல்ல பொலிசார் உதவியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருநங்கை என பொலிசார் தெரிவத்துள்ளனர்.


Next

Related