Saturday, 26 November 2016

சிங்கம் 4 -இந்தா அட்வான்ஸ்…ஹீரோ அவரா? இவரா? குழப்பத்தில் ஹரி…


சிங்கம் 4 -இந்தா அட்வான்ஸ்…ஹீரோ அவரா? இவரா? குழப்பத்தில் ஹரி…

சிங்கம் படத்தை வச்சே தன்னோட 80 வயசு வரைக்கும் படம் பண்ணிடுவாரு போல இருக்கு இயக்குனர் ஹரி. சாமி படம் பண்ணார். போலீஸ் படம் ஹிட் அடிக்க, அடுத்து காக்க காக்க வில் தொழில் கத்துக்கொண்ட சூர்யாவை வச்சி …சிங்கம் படம் எடுத்தார். அது ஹிட் அடிக்க, அடுத்து சிங்கம்2 எடுத்தார். அதுவும் ஹிட் அடிக்க, அவராலேயே முடியலை…இன்னொரு பார்ட்டா …எடுப்போம்னு சிங்கம் 3 ரிலீஸ் ஆக போகுது.3 படத்துக்கும் ஹீரோ சூர்யா தான்.

இந்த நிலையில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் ஹரியை கூப்பிட்டு சிங்கம் 4 படம் பண்ணுங்க.இந்தாங்க அட்வான்ஸ் என்று தந்து இருக்கிறார்கள். 2 கோடி அட்வான்ஸ் என்று காதை கடிக்கிறது கோலிவுட் .

ஏற்கனவே விஜயிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ள விஷயத்தை ஹரி சொன்னவுடன், சிங்கம் 4 சூர்யாவா? விஜய்யா? என்று நீங்க முடிவு பண்ணுங்க” என்று சொல்லிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம்.

குழப்பத்தில் ஹரி…


Next

Related