தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் பெயரிடப்படாத உருவாகி வரும் படம் AK57. தற்போது இப்படத்தின் முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.
சமீபத்தில் தான் மொத்த படக்குழுவும் கடைசி கட்ட படப்பிடிப்புக்கு பல்கேரியா நாட்டுக்கு சென்றது. இந்நிலையில் தற்போது வரை கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்த பல்கேரியா படப்பிடிப்பு முடிந்தால், மீதம் சின்ன சின்ன பேட்ச் வேலை மட்டும் தான் உள்ளதாம். மேலும் இன்டர்நேஷனல் தரத்தில் படம் இருந்தாலும், சிவாவின் குடும்ப செண்டிமெண்ட், கமெர்ஷியல் விஷயங்கள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.