Wednesday, 21 December 2016

மிளகு தூள் கலந்த நீரை குடியுங்கள்: பிறகு பாருங்கள் உடலில் ஏற்படும் அதிசயங்களை!


Drink water mixed with pepper powder

நாம் அனைவருமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால் அதற்கு நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில், உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும் சில செயல்களை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

அந்த வகையில், பார்க்கும் போது, நமது வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தப்படும் மிளகு பொருளானது, ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்தது.

எனவே மிளகை நன்றாக அரைத்து பொடி செய்து, அதை ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் குடித்து வந்தால், நமது உடம்பில் ஏராளமான அற்புதத்தைக் காணலாம்.

Drink water mixed with pepper powder

மிளகு கலந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கோடைக் காலத்தில் நமது உடம்பில் இருந்து அதிகமான வியர்வைகள் வெளியேறுவதால், உடலின் ஆற்றல் குறைந்து விடும். எனவே கோடைக் காலத்தில் மிளகு கலந்த நீரைக் குடிப்பதால், நமது உடம்பிற்கு முழுமையான ஆற்றல் கிடைக்கிறது.
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இந்த மிளகு நீரைக் குடித்து வந்தால், அவர்களின் குடலியக்கம் சீராக்கப்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
நமது உடம்பில் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் வரட்சித் தன்மை, சோர்வு மற்றும் இதர பிரச்சனைகளை மிளகு கலந்த நீர் குணப்படுத்துகிறது.
மிளகில் இருக்கும் காரத்தன்மை நமது உடம்பில் இருக்கும் மெட்டாலிபாசத்தை தூண்டி, அதிகமான கலோரிகளை கரைத்து, உடல் எடையைக் குறைக்கிறது.
தினமும் மிளகு கலந்த நீரைக் குடிப்பதால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்பு பிரச்சனைகள், நீரிழிவு, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

குறிப்பு

இரண்டு கப் நீரில், 2 டீஸ்பூன் மிளகு தூள், 2 ரோஜாவின் இதழ்கள், 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி, பின் அதனுடன் சிறிதளவு தேன் கலந்துக் குடிக்க வேண்டும்.


Next

Related