Wednesday, 21 December 2016

பெண்களின் மூளையின் கட்டமைப்பை மாற்றும் பிள்ளைப்பேறு: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு! Women of childbearing alter the structure of the brain


பெண்களின் மூளையின் கட்டமைப்பை மாற்றும் பிள்ளைப்பேறு: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு! Women of childbearing alter the structure of the brain

பெண்கள் கர்ப்பம் அடைவது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது வரையில் அவர்களில் உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

ஆனால் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய மாற்றம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பெண்கள் தமது குழந்தையைப் பெற்றெடுத்து இரண்டு வருடங்களின் பின்னர் அவர்களின் மூளையின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

MRI ஸ்கானின் உதவியுடனேயே இந்த மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் மாற்றத்தில் பிரதானமாக மூளையில் காணப்படும் நரை நிறப் பொருளின் கனவளவில் மாற்றம் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வின்போது 25 பெண்கள் தாய்மை அடைய முன்னரும், அடைந்த பின்னரும் மூளை ஸ்கானிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next

Related