ராஜமௌலியின் பிரம்மாண்டமான பாகுபலி படத்தை தொடர்ந்து ஷங்கரின் 2.0 படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக படமாக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் தான் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீட்டை மும்பையில் ரூ. 6 கோடி செலவில் வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 400 கோடியை எட்டியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. படத்தில் இடம்பெறும் VFX காட்சிகளுக்காகவே இத்தனை கோடிகள் என்று கூறப்படுகிறது.
அதோடு படத்தின் புரொமோஷன்களுக்கு தயாரிப்பு குழு ரூ. 100 கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.