Friday, 24 February 2017

23ம் தேதியே அம்மா இறந்திருப்பார்: தம்பிதுரை பகீர் தகவல்



அதிமுக-வின் மூத்த தலைவரும், மக்களவை நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி கரூரில் அதிமுக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தம்பிதுரை, அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக துடிக்கிறது, இதை எல்லாத்தையும் விட அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

அம்மாவால் முதல்வரான ஓ.பி.எஸ்., இப்போ அம்மாவோட கனவை அழிக்கற வேலையை செய்கிறார்.

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் செப்டம்பர் 22ம் திகதி அப்போலோவில் சேர்த்ததில் இருந்து, அவர் சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அங்கேயே காவல்காரனாக இருந்தவன் நான்.

அமைச்சர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால்,75 நாட்களும் மருத்துவமனை வாசலில் காவல் காத்து, லண்டன் டாக்டர், டெல்லி டாக்டர்கள் என்று வரவழைத்து அம்மா நலமாக முயற்சிகளை எடுத்தேன்.

23ம் திகதி வரை உயிரோடு இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. டாக்டர்களின் சிறப்பான சிகிச்சையால் அம்மாவின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றியது.

அப்போ எல்லாம், பன்னீர்செல்வம்தான் என்னோடு வருவார். என்னிடம் அம்மாவின் நிலைமை பற்றி கேட்டு விட்டு போவார். அம்மாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட அவர், 75 நாட்களும் அப்போலோவில் இருந்தாரே, அப்போது அம்மாவின் உடல்நிலை பற்றி கேள்வி கேட்டாரா?. அப்போதே என்ன மர்மம் என பார்த்திருக்க வேண்டியது தானே என பேசியுள்ளார்.


Next

Related