முதல்வராக பன்னீர் செல்வம் செயல்பட நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கிறது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதல்வர் பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் திறம்படச் செயல்பட முடியாது என்றும், பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர நாம் தமிழர் கட்சி ஆதரவு அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கமிஷன் அமைப்பதாக பன்னீர்செல்வம் கூறியது காலம்தாழ்ந்தது.
அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மரணம் பற்றி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.