Thursday, 9 February 2017

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு... சசிகலா முதல்வராக தடை?



உச்சநீதிமன்றத்தின் முடிவால் தமிழக முதல்வராகும் வி.கே.சசிகலாவின் கனவு சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியில் நெருக்கடியில் பரபரப்பான சூழ்நிலை ஏறபட்டு வருகிறது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தது சசிகலாவுக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டு நாளை இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு சசிகலாவிற்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு சிதைய கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next

Related