Sunday, 12 February 2017

டிரம்பின் அடுத்த அதிரடி முடிவு! அச்சத்தில் மக்கள்



இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்ககூடிய புதிய ஆணையை விரைவில் டொனால்டு டிரம்ப் விதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிபியா, சிரியா உட்பட ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இது உலக நாடுகளின் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இதை எதிர்த்தி போராட்டமும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து டிரம்பின் தடையை நீதிமன்றம் நீக்கியது.

மீண்டும் இதை எதிர்த்து அரசின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய ஆணையை பிறப்பிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

நாளை இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற வழக்கில் அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும், அதை தவிர வேறு சில வழிகளும் உள்ளன என டிரம்ப் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next

Related