Sunday, 12 March 2017

கலாய்த்தாலும் மொட்ட சிவா கெட்ட சிவா உலகம் முழுவதும் ரூ 10 கோடி வரை வசூல்



லாரன்ஸ் மீது தற்போது சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக அவர் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தானே போட்டுக்கொண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா பேஸ்புக், டுவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கலாய்த்து வருகின்றனர்.

இனி இப்படி ஒரு படம் எடுக்க பலரும் யோசிக்க வேண்டும் என்பது போல் பலர் கலாய்த்தாலும் வசூலில் இந்த படம் எந்த இடத்திலும் குறை வைக்கவில்லையாம்.

3 நாள் முடிவில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் லாரன்ஸ் மார்க்கெட் மேலும் அதிகரித்துள்ளது என கூறப்படுகின்றது.

ஆனால், விடுமுறை தினம் என்பதால் வசூல் வருகின்றது, உண்மையான நிலவரம் திங்கள் அன்று தான் தெரியும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Next

Related