சூர்யா நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் சிங்கம்-3. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. படமும் 6 நாளில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது வந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இப்படத்தின் தமிழக ஷேர் ரூ. 28 கோடி தானாம்.
இப்படத்தை ரூ. 40 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கம்-3 தெலுங்கு, கேரளா, மலேசியா மற்றும் இதர நாடுகளில் நல்ல வசூல் என்றாலும், தமிழகத்தில் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என கூறப்படுகின்றது.