நடிகை கஸ்தூரி அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. அதாவது சினிமா வாய்ப்புக்காக நடிகையர் அனுசரித்து போகாவிட்டால் கேவலப்பட வேண்டும் என நடிகை கஸ்தூரி கூறியதாக செய்தி வெளியானது.
இதனை அறிந்த கஸ்தூரி தற்போது, அதிர்ச்சி தகவலை கஸ்தூரி வெளியிட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற கருத்தை எப்போதும் கூறியதில்லை. எப்படி என் பெயரில் வெளியிட்டனர் என புரியவில்லை என்று கூறியுள்ளார்.
அண்மையில் கஸ்தூரி தாய்மையை போற்றும் விதமாக அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் கலைநயத்துடன், தாய்மை உணர்வோடு எடுக்கப்பட்ட அப்புகைப்படங்கள் பலரால் பாராட்டப்பட்டது.