Sunday, 12 March 2017

ஞாபக சக்தியை பல மடங்கு அதிகமாக்கும் எளிய வழி



சாதாரண மனிதர்களுக்கு ஞாபக சக்தி என்பது குறைவாகவே இருக்கம்.

உதாரணத்திற்கு இப்படியானவர்கள் தமது சாவியை எங்கே வைத்தது என்பது கூட ஞாபகமின்றி தேடுவார்கள்.

சொற்ப அளவிலானவர்கள் அபரிமிதமான ஞாபக சக்தியை கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஒவ்வொரு செயற்பாடும் மிகவும் ஆழமாக பதிந்து ஞாபகத்தில் இருக்கும்.

இப்படியானவர்களைப் போன்ற ஞாபக சக்தியைப் பெறுவதற்கு சாதாரண ஞாபக சக்தி உடையவர்களால் முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது ஒவ்வொரு செயற்பாடுகளையும் சுமார் 40 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும்போது ஞாபகசக்தி இரட்டிப்படைகின்றது என்பதை நிரூபித்துள்ளனர்.

இதற்காக 51 நபர்களுக்கு நாள்தோறும் 30 நிமிடங்கள் வீதம் 40 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next

Related